Wednesday, May 6, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60 வயது காதலனின் தாக்குதலுக்கு இலக்கான 51 வயது காதலி!

60 வயது காதலனின் தாக்குதலுக்கு இலக்கான 51 வயது காதலி!

கல்கமுவவில் இருந்து அபோகம நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

கல்லாவ பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றதுடன், பலத்த காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கல்லாவ பகுதியில் பேருந்தை நிறுத்தி அதில் ஏறிய சந்தேக நபர், குறித்த பெண் மீது தாக்குதுல் நடத்தியுள்ளார்.

51 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் உலகம – கல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் 60 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களாக இருவரும் உறவில் இருந்துள்ளதுடன், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து குறித்த பெண் தொடர்ச்சியாக நான்கு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலால் பெண்ணின் கழுத்து பகுதி மற்றும் காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை நடத்திய நபர் எஹெட்டுவெ வ பொலிஸாரின் காவலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles