சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் காணாமல் போயுள்ளதாக பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லம் மெகசின் சிறைச்சாலைக்குள் அமைந்துள்ளதாகவும், அவரது மனைவி பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வ இல்லத்தை சுத்தம் செய்ய கைதிகள் பயன்படுத்தப்படுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
