கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் முற்பகல் 10 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுகின்றன.
கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவானில் இருந்து காலை 6 மணி முதல் முற்பகல் 11மணி வரை இடம்பெறுகிறது.
படகு சேவையில், குறிக்கட்டுவானில் இருந்து பயணிக்கும், நபர் ஒருவருக்கு, இரு வழிப் பயணக் கட்டணமாக 2000 ரூபா அறிவிடப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாளைய தினம் கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்பவர்களுக்கான காலை உணவை, இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
