Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் உள்ள உணவு விடுதியில் கரப்பானுடன் மீட்கப்பட்ட உணவுகள்

ரயிலில் உள்ள உணவு விடுதியில் கரப்பானுடன் மீட்கப்பட்ட உணவுகள்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலில் உள்ள உணவு விடுதியை நடாத்தியவருக்கு எதிராக பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்ல மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் தரித்துநின்ற ரயிலில் உள்ள உணவு விடுதி பொதுச்சுகாதார பிரிவினரால் திடீர் சோதனையிடப்பட்டது.

இதன்போது அங்கு மனித பாவனைக்கு உதவாத வகையில் கரப்பான், எறும்புகளுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் குறித்த உணவகத்தினை நடாத்தியவருக்கு எதிராக நாளைய தினம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கோட்டைமுனைப்பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான கிஷான், அமிர்தாப் ஆகியோர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் ரயிலில் காணப்படும் உணவு விடுதிகுறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles