Friday, August 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை இறக்குமதி செய்வது சீனி வரி மோசடி போன்றது - துஷார இந்துனில்

முட்டை இறக்குமதி செய்வது சீனி வரி மோசடி போன்றது – துஷார இந்துனில்

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து முன்னைய அரசாங்கம் சீனி வரி மோசடி செய்தது போன்று பாரிய வரி மோசடிக்கு தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கோழி வியாபாரிகள் குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டால் குறைந்த விலையில் முட்டைகளை வழங்க முடியும் என கோழி வியாபாரிகள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும், முட்டை இறக்குமதியின் பின்னணியில் பாரியளவிலான வரி மோசடி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles