Wednesday, August 6, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவினை சூட்சுமமாக கடத்தி சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்து 51 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைதானவராவார்.

இக்கைது நடவடிக்கையானது நேற்றிரவு 11 மணியளவில் அக்கரைப்பற்று இராணுவ முகாம் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர் கைதானார்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் வசம் இருந்து 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles