Thursday, August 7, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதன் உயிரை மாய்த்துக் கொண்ட இராணுவ வீரர்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இராணுவ வீரர்

பனாகொட இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தளை நாவுல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று மாலை பனாகொட இராணுவ முகாமின் 12 ஆவது பீரங்கி படையணிக்கு முன்பாக இந்த இராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.

பனாகொட இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles