இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 2 மில்லியன் முட்டைகள் இன்று கொழும்பை வந்தடையவுள்ளன.
இலங்கையில் முட்டைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதன் முதல்கட்டமாக 2 மில்லியன் முட்டைகளை ஏற்றிய கப்பல் இன்றிரவு இலங்கை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டைகள் உணவகங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
