வாகன உதிரிபாகங்களின் விலை 300 வீதத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனங்களை பழுது பார்க்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான கடனுதவியை வங்கிகளால் வழங்க முடியாததால், அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கொழும்பு பஞ்சிக்வந்த வாகன உதிரி பாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பிரபல வாகனங்களின் உதிரி பாகங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.