Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளஞ்சியத்திலுள்ள போதைப்பொருளை அழிக்க புதிய முறை

களஞ்சியத்திலுள்ள போதைப்பொருளை அழிக்க புதிய முறை

அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் காணப்படுகின்ற போதைப்பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் 3 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய போதைப்பொருள் களஞ்சியத்தில் உள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles