Monday, November 18, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலைக்கு மருந்து விற்பனை: தனியார் மருத்துவமனை குறித்து முறைப்பாடு

அதிக விலைக்கு மருந்து விற்பனை: தனியார் மருத்துவமனை குறித்து முறைப்பாடு

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்று நோயாளி ஒருவருக்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்தாக தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இவ்வைத்தியசாலையில் 12,264 ரூபா பெறுமதியான மருந்துக்கு 33,400 ரூபாவும், 6,700 ரூபா பெறுமதியான மருந்துக்கு 17,030 ரூபாவும் அறவிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணுக்கே இவ்வாறு அதிக விலைக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குறித்த பெண்ணின் மகன் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles