Sunday, May 31, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கரவண்டிகளை திருடியவர் ஹேரோயினுடன் சிக்கினார்

முச்சக்கரவண்டிகளை திருடியவர் ஹேரோயினுடன் சிக்கினார்

முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் 5 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய இராஜகிரிய நாவல வீதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​தலங்கம, கடுவெல, கிராண்ட்பாஸ், கோட்டை மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 5 திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (23) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles