Sunday, April 12, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகினிகத்தேனை தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

கினிகத்தேனை தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

கினிகத்தேனை – கெனில்வத்த தோட்டத்தில் தொழிலாளர்களின் நெடுங்குடியிருப்பு ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீயினால் 4 வீடுகள் சேதமடைந்தன.

இதனால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் தீப்பரவல் காரணமாக நான்கு வீடுகளிலிருந்த தளபாடங்கள், அத்தியாவசிய ஆவணங்கள், ஆடைகள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்படுவதற்கான காரணங்கள் இது வரை உறுதி செய்யப்படாத போதிலும், மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles