செய்திகள்உள்நாட்டுபெண்களை அச்சுறுத்தி வன்புணர்ந்த 'பொட்டே' கைது

பெண்களை அச்சுறுத்தி வன்புணர்ந்த ‘பொட்டே’ கைது

பயாகல பிரதேசத்தில் பெண்கள் மாத்திரம் வசிக்கும் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை அச்சுறுத்தி பாலியல் வன்புணர்ந்த செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொட்டே என அழைக்கப்படும் சந்தேகநபர் (37) நேற்று (19) பயாகல பிரதேசத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் கல்பிட்டி பகுதிக்கு சென்று, கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்ய பயாகல பொலிஸார் பல தடவைகள் முயற்சித்தும் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலவெல, கட்டுகுருந்துகஹலந்த, தெவல கந்த, அகர அசுவ வெரகல ஆகிய பிரதேசங்களில் தனியாக வசித்து வந்த பெண்களை சந்தேகநபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சில பெண்கள் வெட்கத்தின் காரணமாக சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles