Tuesday, February 10, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு26 வயது இளைஞர் கொலை

26 வயது இளைஞர் கொலை

மொரட்டுவ – அங்குலான பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் உக்குன் என அழைக்கப்படும் சுதிர சம்பத் என்ற 26 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவரது உறவினர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது லுனாவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த இளைஞர், அங்குலானையில் உள்ள தமது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட குழுவொன்று கூரிய ஆயுதங்களுடன் வந்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles