Friday, March 14, 2025
26.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு கடனுதவி

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு கடனுதவி

இவ்வருடம் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இணையும் 6,000 மாணவர்களுக்கு மூன்று வருட காலத்திற்கு பத்தாயிரம் ரூபா மாதாந்தக் கடனாக வழங்குவதற்கு அரச வங்கி கல்வி அமைச்சுடன் இணக்கம் எட்டியுள்ளது.

அந்த மாணவர்களுக்கு அரசு மாதந்தோறும் வழங்கும் 5,000 ரூபாவுக்கு கூடுதலாக இந்த பத்தாயிரம் ரூபா வழங்கப்படுகிறது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மாணவர்களின் உணவு மற்றும் ஏனைய தேவைகளுக்கு 5,000 ரூபாபோதுமானதாக இல்லை என்ற காரணத்தால் மாதந்தோறும் மேலதிகமாக 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கோரிக்கைகளை பரிசீலித்ததன் பின்னர் அரச வங்கிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடிந்ததாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (13) தெரிவித்தார்.

#Aruna

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles