Saturday, November 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை பிற்போடுவது தியாகமாம்

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை பிற்போடுவது தியாகமாம்

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை பிற்போடுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் பணப்பற்றாக்குறையால் செய்யப்பட்ட தியாகம் என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பான தீர்மானம் பொறுப்பான அமைச்சரினால் மட்டும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஆளுகையால் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. சத்திரசிகிச்சையை ஒத்திவைப்பது என்பது பாரதூரமான தீர்மானம். உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கு பணமில்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஏதாவது தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles