Monday, December 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிளகாய் உற்பத்தியை 25 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை

மிளகாய் உற்பத்தியை 25 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை

இவ்வருடம் உள்நாட்டு காய்ந்த மிளகாய் உற்பத்தியை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை நவீனமயமாக்கல் செயற்றிட்ட அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.

இலங்கைக்குத் தேவையான மொத்த காய்ந்த மிளகாயின் அளவு 55,000 மெட்ரிக் தொன் என்றாலும், அதில் 50,000 மெட்ரிக் தொன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கையின் வருடாந்த மிளகாய் உற்பத்தி சுமார் 5000 மெட்ரிக் தொன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதுளை கும்பல்வெலயில் மிளகாய் செய்கை வேலைத்திட்டத்தை அவதானிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles