Monday, April 13, 2026
25.6 C
Colombo
செய்திகள்உலகம்ஷேன் வோர்னின் உயில் வெளியானது

ஷேன் வோர்னின் உயில் வெளியானது

மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்னின் உயில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது சொத்துக்கள் அவரது உறவினர்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷேன் வோர்னின் கடைசி உயிலின்படி, அவரது நில சொத்துக்களை அவரது மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 20.7 மில்லியன் டொலர் பெறுமதியான காணி சொத்துக்கள் அவரது பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், அந்த சொத்துக்களில் 7.5 சதவீதம் அவரது சகோதரர் உட்பட மூன்று உறவினர்களுக்கு கொடுக்கப்படவுள்ளது.

எனினும், அவர் தனது சொத்துக்கள் எதையும் முன்னாள் மனைவிக்கு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேன் வோர்னுக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஷேன் வோர்னின் தனிப்பட்ட கடன்கள் மற்றும் பிற வங்கிக் கணக்குகளில் உள்ள பெரும் சொத்துக்கள் தொடர்பிலும் அவரது கடைசி உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷேன் வோர்ன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்து சுற்றுப்பயணத்தின் போது உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles