Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்காஜியாபாத் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த சிறுத்தை (Video)

காஜியாபாத் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த சிறுத்தை (Video)

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சிறுத்தை தாக்கியதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றின் முதல் மாடிக்கு நேற்று பிற்பகலில் திடீரென குறித்த சிறுத்தை புகுந்துள்ளது.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது குச்சி உதவியுடன் சிறுத்தையை விரட்டச்சென்ற வழக்கறிஞர் ஒருவரை சிறுத்தை தாக்கியுள்ளது.

அவரைக் காப்பாற்றச் சென்ற ஐந்து வழக்கறிஞர்கள், ஒரு முடி திருத்தும் தொழிலாளி உள்பட 6 பேரை சிறுத்தை தாக்கியது.

இந்த தகவல் கிடைத்ததும் ஆம்புலன்ஸில் விரைந்து சென்ற மருத்துவ ஊழியர்கள், சிறுத்தை தாக்கி காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொணடு சென்றனர்.

சிறுத்தையின் தாக்குதல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கமராவில் பதிவாகியுள்ளது.

எனவே, அப்பகுதியில் தான் பதுங்கியிருக்கலாம் என நீதிமன்ற ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுத்தை சிக்கியதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles