Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறால் பண்ணையிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு

இறால் பண்ணையிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு

இறால் பண்ணை ஒன்றின் குளத்தில் நேற்று (08) உயிரிழந்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாரியபொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் ஹலவத்த – இரணவில பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் சில காலமாக வேலை செய்து வந்ததாகவும், அந்த பண்ணையின் குளம் ஒன்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏதோ நோக்கத்திற்காக இறால் பண்ணையில் சென்று கொண்டிருந்த போது குளத்தில் விழுந்திருக்கலாம் என நம்புவதாக பண்ணையின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹலவத்தை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஹலவத்தையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles