அரிசி,டைல்கள், ஜவுளிகள் மற்றும் சொகுசு கார்கள் உட்பட 5 பில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுடன் 89 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தின் முனையம் மற்றும் களஞ்சியசாலைகளில் பல வருடங்களாக தேங்கிக் கிடப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் கிடங்குகளில் பல வருடங்களாக சிக்கியுள்ளதாகவும், அந்த கொள்கலன்களுக்கான துறைமுக கட்டணத்தை இலங்கை சுங்கத்தினால் வசூலிக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.