பெற்றோல் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அண்மையில் பெற்றோல் விலை லீட்டருக்கு 100 ரூபா படி குறைக்கப்பட்ட போதும், முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படவில்லை.
அதுபோல தற்போது 30 ரூபா அதிகரித்திருந்தாலும், வாடிக்கையாளர்களையும், முச்சக்கரவண்டி தொழில்துறையையும் பாதுகாக்கும் நோக்கில் கட்டணத்தை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
