Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபலவந்தப்படுத்திய நபரின் கைவிரலை கடித்து துப்பிய பெண்

பலவந்தப்படுத்திய நபரின் கைவிரலை கடித்து துப்பிய பெண்

கந்தேகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நள்ளிரவில் பலவந்தமாக நுழைந்த நபரொருவர் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண் அவரது கைவிரலை கடித்து துண்டாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது, ​​போர்வை ஒன்றால் தம்மை மூடி மறைத்தபடி அந்த நபர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அவர் அந்தப்பெண்ணை பலவந்தப்படுத்திய போது, அவரது கை விரலை பெண் கடித்து துண்டாக்கிய நிலையில், வலி பொறுக்காமல் அவர் தப்பியோடியுள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண் 119க்கு அழைப்பு விடுத்து முறையிட்டதன் பேரில், பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதும், இன்னும் சந்தேகநபர் அடையாளம் காணப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles