Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநானுஓயா விபத்து – சாரதிக்கு பிணை

நானுஓயா விபத்து – சாரதிக்கு பிணை

நுவரெலியா-நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில், கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேருந்து சாரதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரை, 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நுவரெலியாவில் இருந்து பாடசாலை மாணவர்களுடன் கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்தில் சிக்கியது.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கவரவண்டி சாரதியுமாக 7 பேர் உயிரிழந்ததுடன், 53 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles