முட்டை இறக்குமதி தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை இறக்குமதி குறித்து அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்தார்.