பேருவளை பாடசாலையொன்றின் 7ஆம் வகுப்பில் கற்ற மாணவனைக் கொடூரமான முறையில் பிரம்பால் தாக்கிய ஆசிரியராக பணியாற்றும் தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஒரே வகுப்பில் பயிலும் சம வயதுடைய மாணவர்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேரர் குறித்த மாணவர் மீது கோர தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.