Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் தினத்தன்று 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியாதாம்

தேர்தல் தினத்தன்று 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியாதாம்

தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக தேர்தல் தினத்தன்றும் வாக்கு எண்ணும் நாளன்றும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்த முடியும் என்றாலும், அந்த இயந்திரங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய நிலைமை தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக மின்சார சபை, ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles