ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்தார்.
இதனால் 137 அத்தியாவசிய மருந்துகளை தயாரிப்பதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வௌிநாடுகளில் பயிரிடப்படும் மூலிகைகள் மற்றும் சில மருந்து மூலப்பொருட்களை கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
இந்தியாவில் இருந்தே மருந்து மூலப்பொருட்கள் கொண்டுவரப்படுவதாகவும் தற்போது அவற்றின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.