யுக்ரைன் – கிவ்வின் புறநகர் பகுதியில் உலங்கு வானூர்தியொன்று விபத்துக்குள்ளானதில் அந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதியமைச்சர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சிறுவர்கள் இருவரும் பலியானவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, அவரது பிரதியமைச்சர் யெவன் யெனின் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின்மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் என்று யுக்ரைனின் தேசிய பொலிஸார் தெரிவித்துள்ளர்.
யுக்ரேனிய தலைநகரின் கிழக்கு புறநகர்ப் பகுதியான ப்ரோவரியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தா அல்லது ரஷ்யாவுடனான 11 மாத யுத்தத்தின் விளைவாக ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் தெரியவரவில்லை.
முன்பள்ளியொன்று அருகே இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக இந்த சம்பவத்தில் 10 சிறுவர்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.