இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெறும் என்று அரசாங்கம் மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மார்ச் மாதத்துக்துக்கு முன்னதாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலருக்கான உதவியை சர்வதேச நாணய நிதியம் உறுதிசெய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.