இலங்கையில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள சுமார் 2 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ வீதம் அரிசி நிவாரணமாக வழங்கப்படவுள்ளது.
இதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட 20 லட்சம் குடும்பங்களுக்கு இவ்வாறு அரிசி நிவாரணம் வழங்கப்படும்.
இந்த நிவாரணம் இரண்டு மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.