தலவாக்கலை – மிடில்டன் தோட்டத்திலுள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டது.
இதனால் 12 வீடுகள் வரை தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, மற்ற வீடுகளுக்கும் பரவியதால், சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர், உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தை பொங்கல் கொண்டாட்டம் நேற்று இடம்பெற்றதாகவும், இதன் காரணமாக தோட்டத்தில் தை பொங்கல் கொண்டாட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.