எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கட்டண உயர்வு தொடர்பான விபரங்கள் அடுத்தமாதம் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானத்தின்படி, வீட்டு பாவனை மின்சாரத்துக்கான நிலையான கட்டணங்களும் ஜனவரி 15ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.
0 முதல் 30 அலகுகளுக்கு: நிலையான கட்டணம் ரூ. 120/- இல் இருந்து ரூ. 400/- ஆக அதிகரிக்கும்.
31 முதல் 60 அலகுகளுக்கு: நிலையான கட்டணம் ரூ. 240/- இல் இருந்து ரூ. 550/- ஆக அதிகரிக்கும்.
60 முதல் 90 அலகுகளுக்கு: நிலையான கட்டணம் ரூ. 650/-.
90 முதல் 180 அலகுகளுக்கு: நிலையான கட்டணம் ரூ. 1,500/-.
180 அலகுக்கு மேல் ரூ. 2,000/-.