வசந்த முதலிகேவின் தடுப்புக்காவல் நிலையை ஆராய்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழுவொன்று கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றுள்ளது.
குறித்த தூதுக்குழுவில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி, அதன் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி மற்றும் மேலும் இருவர் உள்ளடங்குகின்றனர்.
வசந்த முதலிகே வைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமுக்குச் சென்று அவரது தடுப்புக்காவலை சரிபார்த்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதன்படி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலைமையை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்ததுடன், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவர்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்.
இந்த விசாரணையில் கண்டறியப்பட்ட உண்மைகள் குறித்து விசாரிக்க சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்காலத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.