Sunday, May 17, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு33 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

33 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 33 இலட்சத்துக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவரை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் அம்பலாந்தோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (11) தனமல்வில பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

38 கிலோ 450 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

பலஹருவ – ஊவா குடாஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles