ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அமேசான், 18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இலாபம் தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து இது போன்று நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் திட்டமிட்டிருந்த பணிநீக்கத்தை விட இது அதிக அளவு என்றும் கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1.5 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள தெரிவித்திருந்த அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, 2023ம் ஆண்டு ஊழியர்களின் பணிநீக்கம் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.
#Reuters