Saturday, June 27, 2026
27.8 C
Colombo
அரசியல்ஆட்சியை கைப்பற்றி நாட்டை கட்டியெழுப்புவோம் - அனுரகுமார

ஆட்சியை கைப்பற்றி நாட்டை கட்டியெழுப்புவோம் – அனுரகுமார

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 மாதங்களில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மட்டுமின்றி, அதிகாரத்தைக் கைப்பற்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்யாவிட்டால், போராட்டத்தை நடத்தியேனும் தேர்தலை பெற வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மத்தியில் தமது கட்சியின் அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles