Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாத தோடம்பழங்கள் வைத்தியசாலைகளுக்கு

துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாத தோடம்பழங்கள் வைத்தியசாலைகளுக்கு

இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத 3 கொள்கலன்களில் உள்ள தோடம்பழங்களை, வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உட்பட சுமார் 60 மாகாண வைத்தியசாலைகளுக்கு இந்த தோடம் பழங்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மூன்று கொள்கலன்களிலும் சுமார் 72,000 கிலோ தோடம் பழங்கள் உள்ளன. இதன் மொத்த பெறுமதி 72 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles