Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநௌபர் மௌலவி உட்பட 25 பேரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

நௌபர் மௌலவி உட்பட 25 பேரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி மற்றும் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று நிராகரித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை அறிவித்த தலைமை நீதிபதி தமித் தோட்டவத்த, தற்போது பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பது பொருத்தமானதல்ல. அதன்படி, கோரிக்கைகளை நிராகரிக்கிறோம் என்று கூறினார்.

அதன்பிறகு, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles