Tuesday, July 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வாரம் முதல் முட்டை இறக்குமதி செய்யப்படும்

அடுத்த வாரம் முதல் முட்டை இறக்குமதி செய்யப்படும்

நாட்டிற்கு அடுத்த வாரம் முதல் முட்டை இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு செல்வதற்கு பணம் இல்லை என ஆளும் கட்சியினர் பலர் கூறிவரும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டை ரூ. 40/- முதல் ரூ. 42/- இற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்தகலந்துரையாடலில் முட்டைகளின் அளவு, தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள், விலை மற்றும் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் ஊடாக முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles