Tuesday, April 21, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60க்கு மேற்பட்ட ரயில் சேவைகள் இன்று ரத்துச்செய்யப்படலாம்

60க்கு மேற்பட்ட ரயில் சேவைகள் இன்று ரத்துச்செய்யப்படலாம்

இன்றைய தினம் நாட்டில் 60க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 500 ஊழியர்கள் கடந்த 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றதையடுத்து நேற்றும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

சரியான தொகையை கணிக்க முடியாது என்ற நிலையில், அதிக எண்ணிக்கையிலான ரயில் சேவைகள் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களை உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles