Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபய மீண்டும் அமெரிக்க குடியுரிமையை கோரியுள்ளாராம்

கோட்டாபய மீண்டும் அமெரிக்க குடியுரிமையை கோரியுள்ளாராம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமை பெற மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் இலங்கையை விட்டு வெளியேறினார். தற்போது விடுமுறைக்காக டுபாயில் இருக்கிறார்.

அவர் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் கைவிட்ட அமெரிக்க குடியுரிமையை மீள வழங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் தனது வழக்கறிஞர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவர் கைவிட்ட அவரது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கான கோரிக்கை இன்னும் அமெரிக்க அதிகாரிகளால் பரிசீலிக்கப்படவில்லை என்று அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பொது எந்தவொரு நாடும் புகலிடம் வழங்கத் தவறியதையடுத்து, தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அமெரிக்க குடியுரிமைக்கான முன்னாள் ஜனாதிபதியின் முயற்சிகள் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதை அமெரிக்க தூதரகத்தின் ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளது என்று அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles