நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, இந்தாண்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்கு சுமார் 2,000 வீடுகளை நிர்மாணிக்க தயாராகி வருகிறது.
தெமட்டகொட, பேலியகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் 1,996 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1,888 வீடுகளும், கொட்டாவவில் நிர்மாணிக்கப்படும் 108 வீடுகள் கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
கடந்தாண்டு சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட 552 மில்லியன் யுவான் கடனின் கீழ் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.