Friday, May 23, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் நால்வரும் விளக்கமறியலில்

இந்திய மீனவர்கள் நால்வரும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்கு இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திர கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.

தஞ்சமடைந்த இந்திய மீனவர்களை மீட்ட வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதன்போதே நீதவான் நீதிமன்றம் நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles