Sunday, July 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவசரகால மருந்துகள் கொள்வனவு செய்யும் போது விதிமுறைகள் மீறப்படவில்லை – சுகாதார அமைச்சர்

அவசரகால மருந்துகள் கொள்வனவு செய்யும் போது விதிமுறைகள் மீறப்படவில்லை – சுகாதார அமைச்சர்

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளின் போது கொள்முதல் விதிமுறைகளை மீறவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களில் இருந்து டெண்டர் கோராமல் மருந்துகளை இறக்குமதி செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

டெண்டர் கோராமல் இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்யும் போது, ​​மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அங்கீகாரம் கூட பெறாத நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்து முறைகேடுகள் நடப்பதாக முன்னிலை சோசலிச கட்சி ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது.

அதற்கு விளக்கமளிக்கும் வகையில் சுகாதார அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles