இலங்கையில் எரிபொருள் பாவனை 50% ஆக குறைந்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆண்டின் முதல் சில மாதங்களிலும், இறுதியிலும் எரிபொருள் பயன்பாட்டை ஒப்பிட்டுப் பார்த்ததில் இது தெரியவந்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தரவுகளின்படி, டிசம்பர் 2021 மற்றும் பெப்ரவரி 2022 க்கு இடையில், பெற்றோல் மற்றும் டீசல் தினசரி பாவனை 5,500 மெட்ரிக் டன் ஆகும்.
இது ஆண்டின் இறுதியில் பாதியாக குறைந்துள்ளது.
மேலும், 2021 ஆம் ஆண்டில், எரிபொருள் இறக்குமதிக்காக 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.