கடந்த ஆண்டுடன் (2021) ஒப்பிடும்போது ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் மற்றும் முன்பள்ளி பருவ குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.
இது சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
ஐந்து வயதிற்குட்பட்ட 18,240 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகதாக கூறப்படுகிறது.