கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் ஏ. டி. ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை (23) முதல் இவ்வாறு சிறப்பு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 3 சிறப்பு ரயில்களும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை 3 சிறப்பு ரயில்களும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள காங்கேசன்துறைக்கு சிறப்பு ரயிலும், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயிலும் இணைக்கப்பட்டுள்ளது.