Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு துறைமுக நகரில் புதிய விசா வகைகள் அறிமுகம்

கொழும்பு துறைமுக நகரில் புதிய விசா வகைகள் அறிமுகம்

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவப்படவுள்ள சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற சேவைகளுக்காக வரும் முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பின்வரும் விசா வகைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட விசா வகைகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

  • குடியிருப்பு விசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான “முதலீட்டாளர் விசா”
  • ஊழியர்களுக்கான “பணியாளர் விசா”
  • கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான “CPC வதிவிட சொத்து குத்தகைதாரர் விசா”

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles